Friday, April 10, 2009

தியாகராஜ கிருதி - உண்டே3தி3 ராமுடு3 - ராகம் ஹரி காம்போ4ஜி - Undedi Ramudu - Raga Hari Kambhoji

பல்லவி
1உண்டே3தி3 ராமுடொ3கடு3
ஊரக செடி3 போகு மனஸா

அனுபல்லவி
சண்ட3 2மார்தாண்ட3 மத்4
மண்ட3லமுனனு
செலங்கு3சு(னுண்டே3தி3)

சரணம்
தாமஸாதி3 கு3ண ரஹிதுடு3
4ர்மாத்முடு3 3ஸர்வ-ஸமுடு3
க்ஷேம-கருடு3 த்யாக3ராஜ
சித்த ஹிதுடு3 ஜக3மு நிண்டி3(யுண்டே3தி3)


பொருள் - சுருக்கம்
மனமே!
  • (மெய்ப்பொருளாக) இருப்பவன் இராமன் ஒருவனே;

  • வெஞ்சுடர்க் கதிரோனின் நடு மண்டலத்தினில் திகழ்ந்துகொண்டிருப்பவன் இராமன் ஒருவனே;

  • உலகெல்லாம் நிறைந்திருப்பவன் இராமன் ஒருவனே.

    • தாமதம் முதலான குணங்களற்றவன்;

    • அறவடிவினன்;

    • யாவர்க்கும் பொதுவானவன்;

    • நலமளிப்பவன்;

    • தியாகராசனின் சித்தத்திற்கு இனியவன்.

வீணாக கெட்டுப் போகாதே.


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உண்டே3தி3/ ராமுடு3/-ஒகடு3/
(மெய்ப்பொருளாக) இருப்பவன்/ இராமன்/ ஒருவனே/

ஊரக/ செடி3/ போகு/ மனஸா/
வீணாக/ கெட்டு/ போகாதே/ மனமே/


அனுபல்லவி
சண்ட3/ மார்தாண்ட3/ மத்4ய/
வெஞ்சுடர்/ கதிரோனின்/ நடு/

மண்ட3லமுனனு/ செலங்கு3சுனு/-(உண்டே3தி3)
மண்டலத்தினில்/ திகழ்ந்துகொண்டு/ இருப்பவன்...


சரணம்
தாமஸ/-ஆதி3/ கு3ண/ ரஹிதுடு3/
தாமதம்/ முதலான/ குணங்கள்/ அற்றவன்;

4ர்மாத்முடு3/ ஸர்வ/-ஸமுடு3/
அறவடிவினன்/ யாவர்க்கும்/ பொதுவானவன்/

க்ஷேம/-கருடு3/ த்யாக3ராஜ/
நலம்/ அளிப்பவன்/ தியாகராசனின்/

சித்த/ ஹிதுடு3/ ஜக3மு/ நிண்டி3-/(உண்டே3தி3)
சித்தத்திற்கு/ இனியவன்/ உலகெல்லாம்/ நிறைந்து/ இருப்பவன்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3- ஸர்வ-ஸமுடு3 - ஸர்வஸ்வமுடு3

Top

மேற்கோள்கள்
2 - மார்தாண்ட3 மத்4ய மண்ட3லமுனனு - பாகவத புராணம், 5-வது புத்தகம், அத்தியாயம் 20, (செய்யுள் 43 -46) நோக்கவும்.

சிவனுக்கும் 'மார்தாண்ட3 பை4ரவ' என்று பெயருண்டு.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில், லலிதா மஹா த்ரிபுர ஸுந்த3ரிக்கு, 'மார்தாண்ட3 பை4ரவாராத்4ய' (785) என்று பெயர்.

Top

விளக்கம்
1 - உண்டே3தி3 - இருப்பது - பல்லவியில் இச்சொல் தனியாக உள்ளது. இவ்விடத்தில் இச்சொல் 'ஸத்-சித்-ஆனந்தம்' எனப்படும் பரம்பொருளின் இலக்கணத்தினில் 'ஸத்' எனப்படும் 'மெய்ப்பொருளினை'க் குறிக்கும்.

3 - ஸர்வ-ஸமுடு3 - யாவர்க்கும் பொதுவானவன் - நண்பன், பகைவன் என்ற பாகுபாடற்ற மனநிலையை உடையவன். ஸௌந்தரிய லஹரியில், 57-வது செய்யுளில், ஆதி சங்கரர், அம்மையின் அருளுக்கு உவமை கூறுகையில், 'காட்டிலும், மாளிகையிலும் சமமாக குளிர்ந்த கிரணங்களைச் சிந்தும் மதி'யென்கின்றார். இச்செய்யுளுக்கு காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினை நோக்கவும்.

வெஞ்சுடர்க் கதிரோன் - பகலவன்
தாமதம் - முக்குணங்களிலொன்று
சித்தம் - உள்ளம் அல்லது அறிவு

Top


Updated on 10 Apr 2009

No comments: