Wednesday, April 8, 2009

தியாகராஜ கிருதி - நெனருஞ்சரா நாபைனி - ராகம் ஸிம்ஹ வாஹினி - Nenaruncharaa Naapaini - Raga Simha Vaahini

பல்லவி
நெனருஞ்சரா நாபைனி சால
நீ தா3ஸுட3னு காதா3 ஸ்ரீ ராம

அனுபல்லவி
ஸனகாதி3 யோகி3 ப்3ரு2ந்த3 வந்த்3ய பாத3
ஸாகேத வாஸ ஸத்34க்த போஷ (நெ)

சரணம்
தல்லி தண்ட்3ரி கு3ரு தை3வமு நீவனி
தருசுகா3னு நின்னு நம்மியுன்ன நே
தல்லடி3ல்லுசுண்ட3 13ரி ஜூபவேமி
த்யாக3ராஜ பரிபால ஸு-கு3ண ஸீ1ல (நெ)


பொருள் - சுருக்கம்
ஸ்ரீ ராமா! சனகர் முதலான யோகியர்கள் வந்திக்கும் திருவடியோனே! சாதகேத நகருறையே! நற்றொண்டரைப் பேணுவோனே! தியாகராசனைப் பேணுவோனே! நற்குணசீலனே!
  • மிக்கு கனிவு கொள்வாயென்மீது; உனது தொண்டனன்றோ?

  • தாய், தந்தை, குரு, தெய்வம் நீயென மிக்குன்னை நம்பியுள்ள நான் குழம்பியிருக்க, புகலளிக்காததேனோ?



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நெனரு/-உஞ்சரா/ நாபைனி/ சால/
கனிவு/ கொள்வாய்/ என்மீது/ மிக்கு/

நீ/ தா3ஸுட3னு/ காதா3/ ஸ்ரீ ராம/
உனது/ தொண்டன்/ அன்றோ/ ஸ்ரீ ராமா/


அனுபல்லவி
ஸனக/-ஆதி3/ யோகி3 ப்3ரு2ந்த3/ வந்த்3ய/ பாத3/
சனகர்/ முதலான/ யோகியர்கள்/ வந்திக்கும்/ திருவடியோனே/

ஸாகேத/ வாஸ/ ஸத்3-ப4க்த/ போஷ/ (நெ)
சாதகேத நகர்/ உறையே/ நற்றொண்டரை/ பேணுவோனே/


சரணம்
தல்லி/ தண்ட்3ரி/ கு3ரு/ தை3வமு/ நீவு/-அனி/
தாய்/ தந்தை/ குரு/ தெய்வம்/ நீ/ யென

தருசுகா3னு/ நின்னு/ நம்மி/-உன்ன/ நே/
மிக்கு/ உன்னை/ நம்பி/ யுள்ள/ நான்/

தல்லடி3ல்லுசு/-உண்ட3/ த3ரி/ ஜூபவு/-ஏமி/
குழம்பி/ இருக்க/ புகல்/ அளிக்காதது/ ஏனோ/

த்யாக3ராஜ/ பரிபால/ ஸு-கு3ண/ ஸீ1ல/ (நெ)
தியாகராசனை/ பேணுவோனே/ நற்குண/ சீலனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - 3ரி - சில புத்தகங்களில் இதற்கு 'வழி' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கில் 'த3ரி', 'தா3ரி' என்று இரண்டு சொற்கள் உள்ளன. 'த3ரி' என்ற சொல்லுக்கு 'புகல்' என்றும், 'தா3ரி' என்ற சொல்லுக்கு 'வழி' என்றும் பொருள்.

சனகர் - பிரமனின் மைந்தர்

Top


Updated on 08 Apr 2009

No comments: