Saturday, March 5, 2011

தியாகராஜ கிருதி - மேலுகோ த3யா நிதீ4 - ராகம் ஸௌராஷ்ட்ரம் - Meluko Daya Nidhi - Raga Saurashtram

பல்லவி
மேலுகோ 13யா நிதீ4 மேலுகோ தா31ரதீ2

அனுபல்லவி
மேலுகோ 13யா நிதீ4 மித்ரோத3யமௌ வேள (மே)

சரணம்
சரணம் 1
வென்ன பாலு ப3ங்கா3ரு கி3ன்னலோ நேனுஞ்சினானு
2தின்னகா3ரகி3ஞ்சி தேட கன்னுலதோ 3நன்னு ஜூட3 (மே)


சரணம் 2
நாரதா3தி3 முனுலு ஸுருலு வாரிஜ ப4வுடி3ந்து3 கலா
4ருடு3 நீ 4ஸன்னிதி4லோ கோரி 5கொலுவு காசினாரு (மே)


சரணம் 3
ராஜ ராஜாதி3 தி3க்3-ராஜுலெல்ல வச்சினாரு
6ராஜ நீதி தெலிய த்யாக3ராஜ வினுத நன்னு ப்3ரோவ (மே)


பொருள் - சுருக்கம்
  • தியாகராசன் போற்றுவோனே!

  • கண்விழிப்பாய் கருணாநிதீ! கண்விழிப்பாய் தாசரதீ!

    • பொழுது புலரும் நேரமிது.

  • கண்விழிப்பாய் கருணாநிதீ!

    • வெண்ணையும், பாலும் பொற் கிண்ணங்களில் நான் வைத்துள்ளேன்;

  • கருணையுடன் ஏற்றருளி, தெளிந்த கண்களினால் என்னைக் நோக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!

    • நாரதாதி முனிவர்கள், வானோர், மலரோன், மதிப் பிறை அணிவோனும் உனது சன்னிதியில், வேண்டி, கொலுவு காத்துள்ளனர்.

  • கண்விழிப்பாய் கருணாநிதீ!

    • மன்னாதி மன்னர், மற்றும் திசை மன்னர்கள் யாவரும் வந்துள்ளனர், அரச நீதி அறிய;

  • என்னக் காக்க கண்விழிப்பாய் கருணாநிதீ!



பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மேலுகோ/ த3யா/ நிதீ4/ மேலுகோ/ தா31ரதீ2/
கண்விழிப்பாய்/ கருணா/ நிதீ/ கண்விழிப்பாய்/ தாசரதீ/


அனுபல்லவி
மேலுகோ/ த3யா/ நிதீ4/ மித்ர/-உத3யமௌ/ வேள/ (மே)
கண்விழிப்பாய்/ கருணா/ நிதீ/ பொழுது/ புலரும்/ நேரம் (இது)/


சரணம்
சரணம் 1
வென்ன/ பாலு/ ப3ங்கா3ரு/ கி3ன்னலோ/ நேனு/-உஞ்சினானு/
வெண்ணையும்/ பாலும்/ பொற்/ கிண்ணங்களில்/ நான்/ வைத்துள்ளேன்/

தின்னக3/-ஆரகி3ஞ்சி/ தேட/ கன்னுலதோ/ நன்னு/ ஜூட3/ (மே)
கருணையுடன்/ ஏற்றருளி/ தெளிந்த/ கண்களினால்/ என்னை/ நோக்க/ கண்விழிப்பாய்...


சரணம் 2
நாரத3-ஆதி3/ முனுலு/ ஸுருலு/ வாரிஜ ப4வுடு3/-இந்து3/ கலா/
நாரதாதி/ முனிவர்கள்/ வானோர்/ மலரோன்/ மதி/ பிறை/

4ருடு3/ நீ/ ஸன்னிதி4லோ/ கோரி/ கொலுவு/ காசினாரு/ (மே)
அணிவோனும்/ உனது/ சன்னிதியில்/ வேண்டி/ கொலுவு/ காத்துள்ளனர்/


சரணம் 3
ராஜ/ ராஜ/-ஆதி3/ தி3க்/-ராஜுலு/-எல்ல/ வச்சினாரு/
மன்னாதி/ மன்னர்/ மற்றும்/ திசை/ மன்னர்கள்/ யாவரும்/ வந்துள்ளனர்/

ராஜ/ நீதி/ தெலிய/ த்யாக3ராஜ/ வினுத/ நன்னு/ ப்3ரோவ/ (மே)
அரச/ நீதி/ அறிய/ தியாகராசன்/ போற்றுவோனே/ என்ன/ காக்க/ கண்விழிப்பாய்...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், முதலிரண்டு சரணங்களும், வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

1 - 3யா நிதீ4 - த3யா நிதே4.

2 - தின்னகா3ரகி3ஞ்சி - தின்னக3னாரகி3ஞ்சி.

3 - நன்னு ஜூட3 - நன்னு ப்3ரோவ.

4 - ஸன்னிதி4லோ - ஸன்னிதி4னே.

5 - கொலுவு - கொலுவ.

Top

மேற்கோள்கள்
6 - ராஜ நீதி தெலிய - அரச நீதி அறிய - வால்மீகி ராமாயணத்தில் (அயோத்தியா காண்டம், 100-வது அத்தியாயம்), ராமன், பரதனுக்கு, அரச நீதி குறித்து விவரிப்பதனை நோக்கவும்.

Top

விளக்கம்
தாசரதி - தசரதன் மகன்
மலரோன் - பிரமன்
மதிப் பிறை அணிவோன் - சிவன்

Top


Updated on 05 Mar 2011

No comments: